ETV Bharat / state

#ReleasePerarivalan பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் ராமதாஸ் - ராஜிவ் கொலை வழக்கு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

pmk ramadoss request to governor for perarivalan release
#ReleasePerarivalan பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் ராமதாஸ்
author img

By

Published : Nov 22, 2020, 10:36 PM IST

சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுநருக்கு தர மாட்டோம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.

எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

நேற்று (நவம்பர் 22) ட்ரெண்ட் ஆன#ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்த கருத்தை ராமதாஸ் பதிவிட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.