ETV Bharat / state

சத்துணவு மையங்களை குறைக்கும் எண்ணத்தை கைவிடுங்கள் - அன்புமணி ராமதாஸ்!

author img

By

Published : Dec 5, 2022, 1:16 PM IST

தமிழ்நாட்டில் 28,000 சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு இருந்தால், அதனை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

government
government

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டச் சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும்.

தமிழ்நாடு முழுவதும் 3 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள சத்துணவு மையங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று அரசு ஆணையிடப்பட்டிருப்பதன் நோக்கம், 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்துக் கொண்டு சென்று வழங்குவதாகத்தான் இருக்க வேண்டும். இது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கச் செய்யும்- சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைத்து விடும்.

ஓரிடத்தில் உணவைத் தயாரித்துப் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும்போது, உணவு ஆறிவிடும்- அதேபோல் உணவின் சுகாதாரமும் பாதிக்கக்கூடும். இந்த நடவடிக்கையால் சத்துணவு அமைப்பாளர்களும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும்.

ஒருபுறம், காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளைச் சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் தமிழகத்தில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது- அதனால், காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும், அந்தந்த பள்ளிகளில் சமைத்து வழங்கும் வகையில் விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சமூக நலத்துறை, அதை விட்டுவிட்டு சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டங்களை வகுப்பது அரசுக்குப் பெருமை சேர்க்காது. எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு: கோவையில் விவசாயிகள் நடைபயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.