ETV Bharat / state

'சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்' - பாமக வெங்கடேசன் - நடிகர் சூர்யா

ஜெய்பீம் பட குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் எங்கும் சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என தென் சென்னை காவல் இணை ஆணையரிடம் புகார் அளித்த பின் பாமக துணை பொது செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பாமக
பாமக
author img

By

Published : Nov 16, 2021, 11:10 PM IST

சென்னை: தென் சென்னை காவல் இணை ஆணையர் நரேந்திர நாயரிடம் ஜெய்பீம் (Jai Bhim) படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாமக மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் குரோம்பேட்டை கண்ணன், பட்டு பாண்டியன், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஜேஎம் சேகர் உள்பட 20க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று (நவ.16) மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் " சூர்யா நடித்து வெளி வந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தினரிடமும், பட்டியலின சமுதாயத்தினர் இடையேயும் கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. மேலும் வன்னியர் சமுதாய தலைவர்களைப் பற்றி அவதூறாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதனால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தொழில் புரிவோர் மற்ற சமுதாயத்தினருடன் இணக்கமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொழில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இந்த படத்தில் நடித்த சூர்யா (suriya), இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"எனக் கூறப்பட்டுள்ளது.

'சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்' - பாமக வெங்கடேசன்

மனு அளித்தபின் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "வன்னிய சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஜெய்பீம் படம் உள்ளது. பொழுது போக்கிற்காக படம் எடுக்கலாம். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வன்னிய சமுதாயத்தை கொடூரமானவர்கள் போல் சித்தரிப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும்.

நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் சூர்யாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்த விடமாட்டோம்" என்று கூறினார்.

முன்னதாக நேற்று ஜெய்பீம் படத்திற்கும், சூர்யாவிற்கும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் #westandwithsuriya என்ற ஹேஷ்டேக்யை டிரெண்ட் செய்து திரையுலகினரும், இணைவாசிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.