ETV Bharat / state

ரூ.18,321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்! - PMK founder Ramadoss urging disbursement of corona relief funds to india

சென்னை: கரோனா ஒழிப்புப் பணிக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.18 ஆயிரத்து 321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : May 4, 2020, 10:19 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு முழு மாதம் (ஏப்ரல்) நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு கோரிய நிதியை விரைந்து பெற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக, முதலில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கோரியிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தகட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக ரூ. ஆயிரத்து 321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காகத் தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து ஆயிரம் கோடியும் வழங்கும்படி மத்திய அரசைக் கோரியிருந்தார்.

ஆனால், இதுவரையில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ஆறு ஆயிரத்து 420 கோடியை மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி கிடைக்கவில்லை.
நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எட்டு ஆயிரங்கோடிக்குப் பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த சொந்த வரி வருவாய் இலக்குகளில் பாதியைக் கூட எட்ட முடியுமா? என்பது ஐயமாகவே உள்ளது.

மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய அனைத்து நிதியுதவிகளும் கிடைத்தாலும் கூட, கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டியிருக்கும். நடப்பு ஆண்டில் நிகரக்கடன் ரூ.59 ஆயிரத்து 209 கோடி உட்பட ஒட்டுமொத்தமாக ரூ.83 ஆயிரம் 350 கோடி கடன் வாங்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், எதிர்பார்த்ததை விட வருவாய் குறைவதாலும், செலவுகள் அதிகரிப்பதாலும் நிகரக் கடனின் அளவை ரூ.68,066 கோடியாக உயர்த்த மாநில அரசு அனுமதி கோரியுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசு வாங்க வேண்டிய ஒட்டுமொத்தக் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வேறு வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், மத்திய அரசு தான் உதவி செய்தாக வேண்டும். அது மத்திய அரசின் கடமையும், பொறுப்பும் கூட.

எனவே, கரோனா ஒழிப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.18 ஆயிரத்து 321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்ற அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் - டாக்டர். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.