ETV Bharat / state

வேளாண் மின் இணைப்பில் அறநிலையத் துறை முட்டுக்கட்டை போடக் கூடாது - பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ்

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்யும் உழவர்களை அறநிலையத்துறை கைவிட்டு விடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK founder ramadoss
PMK founder ramadoss
author img

By

Published : Oct 4, 2020, 8:03 PM IST

சென்னை: வேளாண் இலவச மின் இணைப்பில் அறநிலையத் துறை முட்டுக்கட்டை போடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டில் வேளாண் பயன்பாடுகளுக்காக மின்சார மோட்டார் அமைக்க தமிழ்நாடு அரசு இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த சேவையை பெறுவதற்காக 2000ஆவது ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 593 விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைந்து மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. 2000ஆவது ஆண்டு ஏப்ரல் முதல் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்க அரசு அனுமதித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சாதாரண மின் இணைப்புத் திட்டத்தில் விண்ணப்பித்த உழவர்கள், தட்கல் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு மாற்றிக் கொண்டு இலவச மின்சார இணைப்பை விரைவாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாகவே உழவர்களுக்கு பயனளிக்கும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ள இதற்கு மாறான நிலைப்பாட்டால், அந்தத் துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள் இலவச மின்சார இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு பெற தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என்று அத்துறையின் அலுவலர்கள் பிடிவாதம் பிடிப்பது தான் பிரச்னை ஆகும். அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரும்பான்மையான நிலங்கள் பாசன வசதி இல்லாத பகுதிகளில் தான் உள்ளன. மோட்டார்களின் உதவியுடன் தான் அவற்றுக்கு நீர் இறைத்து பாசனம் செய்ய முடியும். டீசல் விலை உச்சத்தைத் தொட்டுள்ள இந்த காலத்தில் டீசல் நீரிரைப்பான்களைக் கொண்டு பாசனம் செய்வது லாபகரமாக இருக்காது. நீர்ப்பாசன வசதி இல்லாமல் விவசாயம் செய்யவும் முடியாது.

நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதே சிக்கலானது தான். அதிலும் பாசன வசதி இல்லாவிட்டால், விவசாயம் என்பது இழப்பை மட்டுமே ஏற்படுத்தும். தமிழ்நாடு அரசின் இலவச மின் இணைப்பு கிடைத்தால் நீர்ப்பாசன செலவுகள் மிச்சமாகும். அது உழவர்களின் வாழ்க்கையை ஓரளவு வளப்படுத்த உதவும்.

ஆனால், அறநிலையத்துறை எந்த காரணமே கூறாமல் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பது உழவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பறித்து விடும். அது நியாயமற்றது. அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்யும் உழவர்களில் பெரும்பான்மையினர் குத்தகையை முறையாக செலுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அறநிலையத்துறைக்கு அவர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை அறநிலையத்துறை கைவிட்டு விடக் கூடாது. இதை மனதில் கொண்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெறுவதற்கான தடையில்லாச் சான்றுகளை வழங்க அத்துறை முன்வர வேண்டும். இது குறித்து அத்துறைக்கு முதலமைச்சர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிலத்தை உழுவ டிராக்டர் கிடைக்கவில்லை - திருவாரூர் விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.