இந்தச் சந்திப்பின் போது தொகுதி பங்கீடு, இட ஒதுக்கீடுக்கான நீண்ட நாள் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தையில், பாமக அதிமுகவிடம் வருகின்ற தேர்தலில் 31 இடங்கள் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது.
அவைகள் அனைத்தும் வட தமிழ்நாடு, வன்னியர் அதிகம் உள்ள தொகுதிளில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்த கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்றையை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூன்று நாள்களுக்கு முன்பு, இதே கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இதில், அதிமுக தரப்பில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, பாமக சார்பில், ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு