சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து 9 மாவட்ட நிர்வாகிகளிடம் இணைய வழியில் ஆலோசித்ததாகவும், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு - கொதிக்கும் கமல்