பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகே, மாநில வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாநிலத் தலைவர் முருகன் கேக் வெட்டிய பின், இனிப்புகளும் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் உள்ளிட்டப் பொருள்களும் வழங்கப்பட்டன. மேலும் பாஜகவினர் ஓட்டும் ஆட்டோக்களுக்கு பிரதமர் மோடியின் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.
![கேக் வெட்டி பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-pmmodibirthdaycelebration-script-7204624_17092020165659_1709f_1600342019_42.jpeg)
பின்னர் ’மன் கி பாத்’ உரையின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த நான்கு மாத நாய்க்குட்டி ஒன்றை மாநிலத் தலைவர் முருகனிடம் வழங்கிய வழக்கறிஞர் பால் கனகராஜ், அதனைத் தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : 'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்