ETV Bharat / state

சிறப்பு தேர்வு எழுத ஏப்ரல் 8 முதல் 12 வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

சென்னை: 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், ஏப்ரல் 8 முதல் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள்
author img

By

Published : Apr 2, 2019, 9:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், ஒன்று முதல் இரண்டு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் சிறப்பு துணைத் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தில்”ஏப்ரல்15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

11,12 ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு
8 ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் 

சென்னை, 

 11,12 ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு  மார்ச் 2019,  பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரும் 8 ந் தேதி முதல் 12 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.   
மேலும் மார்ச் 2019, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர்,  அந்த தேர்வுகளில் தோல்வியுறும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளி ,தேர்வெழுதிய தேர்வு மையங்கள்  முலம்  ஜுன் 2019  சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.
  மார்ச் 2018-ல் நடத்தப்பட்ட 11 ம்  ஆண்டு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி
பெறாத தேர்வர்கள் மார்ச் 2019 பருவத்தில் விண்ணப்பிக்க தவறி இருப்பின், அவர்கள்தேர்ச்சிப் பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று  ஓராண்டு இடைவெளியும்  1. 6.2019 அன்று 15  வயது 6 மாதம்  பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே நேரடித் தனித்தேர்வர்களாக  தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
 பழைய நடைமுறையின்படி (ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்கள் வீதம்மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுதிதேர்ச்சி பெறாதோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வெழுத மார்ச் 2019 பருவத்தில்விண்ணப்பிக்க தவறி இருப்பின் அவர்கள் ஜுன் 2019 சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
   
11,12 ம் வகுப்பு  சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு 8. 4.2019  மதியம்  முதல் 12. 4.2019   வரையிலான நாட்களில்  இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
 இந்த தேதிகளில்  விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தில்” 15.4.2019 மற்றும் 16. 4.2019 ஆகிய தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத
வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும்தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதில் கூறியுள்ளார். 
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.