கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ப்ளஸ் 2 தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று முடிந்தன. இதைத்தொடர்ந்து தற்போது தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்ச்சி விகிதம் 92.3 விழுக்காடாக உள்ளது. இதில் மாணவிகள் 94.80 விழுக்காடும், மாணவர்கள் 89.41 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.3 விழுக்காடு அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை முறையே திருப்பூர் 97.12, ஈரோடு 96.99, கோவை 96.39 விழுக்காடு பெற்றுள்ளன.
கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 89.4 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க: பல்கலை, கல்லூரித் தேர்வுகளுக்குத் தடைக் கோரி வழக்கு!