ETV Bharat / state

பணம் செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் எந்திரம் நாளை அறிமுகம் - Plan to expand meendum manjappai project

தானியங்கி எந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை நாளை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ATM ல் பணம் செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் திட்டம்!

author img

By

Published : Jun 4, 2022, 4:01 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 பதக்கம் வென்று தமிழ்நாடு வீராங்கனை ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார். அதேபோல் டென்னிஸ் பிரிவில் விளையாடிய ப்ரித்வி சேகர் பதக்கம் வென்றுள்ளார். இருவருக்கும் முதலமைச்சர் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கியுள்ளார்.

இனி வரும் காலத்தில் பங்குபெறும் அனைத்துப் போட்டிகளுக்கும் என்னென்ன உதவிகள் தேவையோ, அவை அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 15ஆம் தேதிக்குள் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சபை திட்டத்தை விரிவாக்கும் விதமாக தானியங்கி எந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் நாளை தொடக்கி வைக்கப்பட உள்ளது. விரைவில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இந்த எந்திரம் வைக்கப்படும் " என்றார்.

இதையும் படிங்க: அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.