கரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் அத்தியாவசிய உணவு பொருள்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தற்போது கரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள (quarantine) குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அவர்களது இல்லங்களுக்குச் சென்று விநியோகிக்க மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சென்னையில் மட்டும் சரக மண்டலவாரியாக 6917 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதில், அம்பத்தூர் 1447, அண்ணா நகர் 1150, சிதம்பரனார் 879, பெரம்பூர் 230, ஆர்.கே. நகர் 409, இராயபுரம் 241, திருவொற்றியூர் 531, வில்லிவாக்கம் 1,923 என மொத்தம் 6,917 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இதுகுறித்து அந்தந்த மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அலுவலர்கள் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும், பொருட்கள் வழங்குவதற்கு முன்பே அந்த குடும்பத்திடம் விவரம் தெரிவிக்கவேண்டும் உள்ளிடவை மாவட்ட அலுவலர்களிடம் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்