ETV Bharat / state

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் - பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

author img

By

Published : Sep 22, 2022, 11:07 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தைப் போல, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் அதில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மண்டல மையங்களில் நடத்திய பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் இதுவரை 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வுசெய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்குகொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் இப்போது படித்து வரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் www.tnou.ac.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் இயக்குநரை 9791234586, 8667511342 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை படித்துதான் ஆக வேண்டும் - அமைச்சர் மா.சு. விளக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.