ETV Bharat / state

மருத்துவ மாணவர்கள் நல வாரியம் அமைக்க கோரிக்கை - ரஷ்யா உக்ரைன் போர்

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் நலன் காக்க மருத்துவ மாணவர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : Feb 25, 2022, 4:24 PM IST

சென்னை: தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் தமிழ்நாடு மாணவர்கள் நலன்காக்க மருத்துவ மாணவர்கள் நல வாரியம் ( Medical students welfare board) அமைக்க வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “ரஷ்யாவின் நியாயமான கோரிக்கைகளை அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும் ஏற்றிருந்தால் இந்த நிலைமை உருவாகி இருக்காது. அமெரிக்கா, நேட்டோவின் செயல்பாடுகள் ஐரோப்பா முழுவதும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

உலக சமாதானத்திற்கு, முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. உக்ரைனில் மருத்துவக் கல்வி பயிலும் ஏராளமான மாணவர்களும், இதர துறைகளில் படிக்கும் மாணவர்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது மிகுந்த வேதனையைத் தருகிறது. அம்மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு முன்கூட்டியே செய்ய தவறிவிட்டது.

பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மாணவர்களையும், குடிமக்களையும் முன்கூட்டியே உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்ட நிலையில், இந்திய அரசு இதில் போதிய அக்கறை செலுத்தவில்லை. மோடி அரசு முன்கூட்டியே திட்டமிட்டு இந்திய மாணவர்களையும் அங்குள்ள குடிமக்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட அவலநிலை ஏற்பட்டிருக்காது.

இந்திய மாணவர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் குண்டு துளைக்காத பதுங்கு இடங்களிலும் தஞ்சம்புக வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல், பணம் இல்லாமல் அவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.

உக்ரைன் நிலவரம் குறித்து முன்கூட்டியே சரியான கணிப்புக்கு வர மத்திய அரசு தவறிவிட்டது. மத்திய அரசின் உளவுத் துறை தோல்வியடைந்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அது மட்டுமன்றி இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை தனியார் நிறுவனமான டாட்டாவிற்கு விற்றுவிட்டதும், இந்திய மாணவர்களை உரிய நேரத்தில் மீட்பதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைப் போலவே விமான கட்டணங்கள் மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்ததும் மாணவர்களைப் பாதிப்படையச் செய்தது. கட்டண உயர்வால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் மாணவர்களால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.

எனவே, இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்திய மாணவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் பயணச் செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பான தங்கும் இடம் போன்றவற்றை கிடைப்பதை உறுதிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு உக்ரைனில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்கு உதவி மையத்தை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களின் பயணச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்துள்ளதும் பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் படித்துவிட்டு வரக்கூடிய தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவராகப் பயிற்சிப் பெறுவதற்கான கட்டணம் மூன்று லட்சத்து 54 ஆயிரம் ரூபாயிலிருத்து 29 ஆயிரத்து 400 ரூபாயாக தமிழ்நாடு அரசால் குறைக்கப்பட்டுள்ளது; இது வரவேற்புக்குரியது.

அவர்கள் பயிற்சி மருத்துவர்களாகச் சேர்வதை எளிமையாக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே சீரான கொள்கையை உருவாக்கிட வேண்டும். அவர்களுக்கான பயிற்சி மருத்துவ இடங்களை 7.5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளிலும் அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதுடன், பயிற்சிகால உதவி ஊதியமும் வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டிலும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் காக்க மருத்துவ மாணவர்கள் நல வாரியம் ( Medical students welfare board) அமைக்க வேண்டும் என்ற சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்களின் சங்கத்தின் நீண்ட காலக் கோரிக்கையையும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாரியத்தை மாணவர்கள் தொடர்புகொள்ள நிரந்தர தொலைபேசி எண்கள், மின்னஞ்சல், வலைதள வசதிகளைச் செய்துதர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்- உதவி கேட்டு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.