ETV Bharat / state

சென்னையில் மூன்றாம் கட்ட காவலர் குறைதீர்ப்பு முகாம் - சென்னை மாநகர ஆணையர் தலைமை - துறை ரீதியிலான நடவடிக்கைகள் ரத்து

சென்னையில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ள காவலர் குறைதீர்ப்பு முகாம்களில் காவல் துறையினரிடம் இருந்து மொத்தம் 2,692 மனுக்கள் பெறப்பட்டு 2,231 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூன்றாம் கட்ட காவலர் குறைதீர்ப்பு முகாம்

author img

By

Published : Dec 22, 2022, 4:10 PM IST

சென்னையில் மூன்றாம் கட்ட காவலர் குறைதீர்ப்பு முகாம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காவல்துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்த் தொற்று பரவல், தேர்தல் பணி, பந்தோபஸ்து, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் பல்வேறு இடங்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைகள் கூட ஏற்பட்டன.

அதன் தொடர்ச்சியாக காவல் துறையினரின் நலன் கருதி அவர்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அனைத்து காவல் துறையினருக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் காவல்துறை சார்பில் காவலர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் காவலர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த குறைதீர்ப்பு முகாம்களில் தீர்க்கப்படாத குறைகள் தொடர்பாக டி.ஜி.பி தலைமையில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களின்போது மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐ.ஜிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காவல் துறையினரிடம் மனுக்கள் பெறப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை இதுவரை இரண்டு கட்டங்களாக காவலர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (டிச.22)மூன்றாம் கட்டமாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல்துறை சார்பில் குறைதீர்ப்பு முகாம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முகாமில் தற்போது வரை கலந்துகொண்டுள்ள 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் இருந்து ஒருவர் பின் ஒருவராக, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று வருகிறார்.

குறிப்பாக பணியிடமாற்றம் தொடர்பாகவும், துறை ரீதியிலான நடவடிக்கைகளை ரத்து செய்வது தொடர்பாகவும், வீட்டு வசதி வாரியம் சார்பில் காவலர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கித் தருவது தொடர்பாகவும், ஆயுதப்படையில் இருந்து காவல் நிலையங்களுக்கு மாற்றம் கோருதல் போன்ற குறைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

தற்போது வரை, 501 காவல் துறையினர் முகாமில் கலந்துகொண்டு மனுக்களை வழங்கி வரும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன், தலைமையிட இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய தலைமையிட கூடுதல் ஆணையர் லோக நாதன், சென்னையில் இரண்டு கட்டங்களாக இதுவரை நடத்தப்பட்டுள்ள காவலர் குறைதீர்ப்பு முகாம்களின் மூலம் காவல் துறையினரிடம் இருந்து மொத்தம் 2,692 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 2,231 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அதில் பல்வேறு காரணங்கள் காரணமாக முடிக்கப்படாத 460 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்று வரும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீதும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய கூடுதல் ஆணையர் லோகநாதன், முடிக்கப்படாத நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் நிச்சயமாக தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பிய இபிஎஸ் அணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.