கரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு தொழில்துறைகளை ஆட்டம் காணச்செய்கிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மார்ச் இறுதிவரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவுவதைத் தடுக்க இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மருந்தியல் துறை தேர்வு தேதியில் மாற்றம் செய்துள்ளதாகத் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு தேர்வுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மார்ச் 30ஆம் தேதிமுதல் தொடங்குவதாக இருந்த இளநிலை மருந்தியல் (பி.பார்ம்) முதல், மூன்றாம் பருவத் தேர்வுகள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பை மறைத்த ரயில்வே ஊழியர் இடைநீக்கம்