இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”வருவாய் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலராக மாற்றப்பட்டதால், வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வகித்துவந்த இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார்.
நில நிர்வாக ஆணையராகப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ் குமார் பன்சால் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பொறுப்பை இவர் கூடுதலாகக் கவனிப்பார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எல்லைப் பிரச்னையில் பிரதமர் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார்' - ஓபிஎஸ் புகழாரம்