ETV Bharat / state

கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி; பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு! - redate

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களுக்கு, வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

pg-computer-teacher-exam
author img

By

Published : Jun 23, 2019, 6:42 PM IST

Updated : Jun 23, 2019, 7:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 119 மையங்களில் நடத்தப்பட்டது. இதற்கு 30,833 பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வை முதன்முறையாக கணினி வழியில் நடத்தியது.

இந்நிலையில் தேர்வின்போது ஒருசில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலர் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நாள், தேர்வு மையம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Intro:கம்ப்யூட்டர் முதுகலை ஆசிரியர் பணி தேர்வில் குளறுபடி
பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறுத் தேதியில் தேர்வு
Body:

சென்னை,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் 23.06.2019 அன்று கம்ப்யூட்டர் ஆசிரியர் நிலை-1 (முதுகலை ஆசிரியர்)க்கு ஆன்லைன் வழியில் தேர்வினை தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் வழித் தேர்விற்கு 30,833 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக கம்ப்யூட்டர் வழியில் இந்தத் தேர்வை நடத்தியது. பெரும்பாலான மையங்களில் எந்தவித இடர்பாடும் இன்றி இந்தத் தேர்வு நடைபெற்றது. எனினும், ஒருசில மையங்களில் ஓரிரு ஆய்வகத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது.
எனவே, தேர்வு மையத்திற்கு வருகைபுரிந்து, கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் தேர்வில் பங்குகொள்ளாதவர்களுக்கும், தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும். எனவே, இந்தத் தேர்வர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அச்சப்படத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் விரைவில் தகவல்கள் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Conclusion:null
Last Updated : Jun 23, 2019, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.