ETV Bharat / state

ஜூலை 20-இல் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம்! - pf pensioners grievance meet

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

EPFO grievances
EPFO grievances
author img

By

Published : Jul 9, 2021, 10:29 PM IST

சென்னை: ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகத்தில் ஜூலை 20ஆம் தேதி, மாலை 3.30க்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதில் தங்களுக்கு உள்ள சிக்கல்கள் மற்றும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, பெயர், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை நேரில் அல்லது pension.rochn1@epfindia.gov.in என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரும் 16-ஆம் தேதிக்குள் இதைச் செய்ய வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைப்பு, மின்னஞ்சல் மூலமாக அளிக்கப்படும் என்று சென்னை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய ஆணையர் ரித்து ராஜ் மேத்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வங்கி ஊழியர் போல நடித்து முதியவர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.