சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 10 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 93 காசுகளாகவும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இந்த விலை மேலும் அதிகரித்துள்ளது.
இதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இன்று வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் டீசல் லிட்டருக்கு 100 ரூபாய் 29 காசுகளுக்கு என விற்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.