சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 75-ஆவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 4) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 113.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மும்பையில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.04 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 3.01 காசுகள் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ‘5ஜி’ அலைக்கற்றை ஏலத்தில் மோசடி - ஆ. ராசா பரபரப்பு குற்றச்சாட்டு... முழுவிவரம்!