சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் 37 ஆவது நாளாக இன்றும் (மே.14) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மே 1 ஆம் தேதி கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும், மே 6 ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
இதனிடையே, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க:'ரீசார்ஜபிள் இ-பைக்' - மதுரை கல்லூரி மாணவரின் அசத்தல் உருவாக்கம்