மக்கள் பணியில் மக்கள் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பொதுநல மனுவில், “தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 222 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்து 350 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
கரோனாவால் இறந்த பலரது குடும்பம் வருமானமின்றி வாழ்வாதாரத்துக்காக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறது. போதுமான நிதியுதவி வழங்காவிட்டால், சமூகத்தில் சட்டவிரோத குற்றச்செயல்கள் பெருக அரசே காரணமாகிவிடும். கரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளதை போல, கரோனாவால் உயிரிழக்கும் சாதாரண பொதுமக்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்.
இதற்கு அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்ப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.