ETV Bharat / state

பெண் போல் நடித்து திருமண மோசடி.. ரூ.21 லட்சத்தை ஆன்லைன் கேமில் இழந்த நபர்!

திருமணம் செய்து கொள்வதாக பெண் போல பேசி 21 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்தது எப்படி என்று கைது செய்யப்பட்ட நபர் விளக்கும் வைரல் வீடியோ

author img

By

Published : Dec 8, 2022, 6:49 AM IST

சென்னை: புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரகுராமிற்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் தேடி வந்துள்ளனர். மேட்ரிமோனி மூலம் மகனுக்கு வரன் தேடிய நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போனிற்கு ஒரு மணப்பெண் குறித்து தகவல் வந்துள்ளது.

அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய பாலசுப்பிரமணியிடம், தன்னுடைய பெயர் கல்யாண ராமன் எனவும், தன்னுடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்ற பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து பாலசுப்ரமணியன் தன்னுடைய மகனின் விவரங்களை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தாயாருக்கு உடல்நிலை சரியில்லை: மீண்டும் பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்ட கல்யாணராமன், ரகுராமை அவர்களது வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து ரகுராமும் ஐஸ்வர்யாவும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது.

திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவ செலவிற்கு ரகுராமிடம் பணம் கேட்டுள்ளார். இதை நம்பி ரகுராம் முதலில் G pay மூலம் 8 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பணம் வேண்டும் என ஐஸ்வர்யா பலமுறை ரகுராமிடம், சுமார் 21 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரகுராம் ஐஸ்வர்யாவிடம் திருமணம் ஏற்பாடுகள் குறித்து கேட்கும் போதெல்லாம், கல்யாணராமனும் ஐஸ்வர்யாவும் ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளனர். இதனால் ரகுராம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப தர முடியாது என கல்யாணராமனும், ஐஸ்வர்யாவும் ரகுராமிடம் கூறியுள்ளனர்.

மோசடி செய்தது எப்படி என்று கைது செய்யப்பட்ட நபர் விளக்கும் வைரல் வீடியோ

பெண் குரலில் பேசி மோசடி: இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார். நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த தாத்தாத்ரி (39) என்பவர் கல்யாணராமனாகவும், ஐஸ்வர்யாவாகவும் பேசி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவரை பிடிக்க தத்தாத்திரிக்கு கொரியர் வந்துள்ளதாக நாடக மாடி அவரை சுற்றி வளைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். செல்போன் மூலம் தன்னை தொடர்பு கொண்டது காவல்துறை தான் என தெரிய வந்து, தான் மைசூரில் இருப்பதாகவும் காவல்துறையினரை அலைய விட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் சாதுரியமாக சைபர் கிரைம் உதவியுடன் தத்தாத்திரியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

பின்னர் விசாரணையில் மேட்ரிமோனி இணையதளத்தில் ஐஸ்வர்யா என்ற பெயரில் கணக்கு துவங்கி இணையதளத்திலிருந்து மாடலிங் பெண் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, கடந்த நான்கு மாதமாக செல்போனிலேயே பேசிக்கொண்டு ஐ.டி ஊழியரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

பெண் போல பேசிக்காட்டி வீடியோ: பின்னர் காவல்துறையினர் தாத்தாத்ரி செல்போனில், செயலிகள் பயன்படுத்தி பெண் குரலில் பேசினாரா அல்லது மிமிக்ரியில் பேசினாரா என விசாரணை செய்த போது, இயற்கையிலேயே பெண் தன்மை கொண்ட குரல் தத்தாத்திரிக்கு இருப்பதன் காரணமாக அதனை பயன்படுத்தி பெண் குரலில் பேசி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒரே நேரத்தில் பெண்ணின் உறவினர் போலவும் பெண்ணை போலவும் மாறி மாறி பேசி ஏமாற்றியதை அவரே விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணையில் இரு குரல்களில் பேசும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் கேமில் இழப்பு: மெடிக்கல் துறையில் வேலை பார்த்து வந்த தத்தாத்ரி வேலையில்லாமல் இருந்தபோது இது போன்ற நூதன முறையில் மோசடி செய்து, பணத்தை சம்பாதிக்க திட்டமிட்டதையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். ஆனால், மோசடியாக சம்பாதித்த 21 லட்சம் ரூபாய் பணத்தை, கேலக்ஸி வின் என்கின்ற ஆன்லைன் கேமில் இழந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஒரு காயின் மேல் 8,000 ரூபாய் பந்தயம் வைத்து வெற்றி பெற்றால் 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தொடர்ந்து அந்த ஆன்லைன் கேமிலேயே விளையாடி அனைத்தையும் இழந்ததாக தத்தாத்திரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுபோன்று மேட்ரிமோனியில் ஐஸ்வர்யா என்ற பெயரில் எத்தனை ஆண்களை ஏமாற்றியுள்ளார்.

எவ்வளவு பணம் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து எல்லாம் தீவிர விசாரணை நடத்த, காவலில் எடுத்து விசாரிக்கவும் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட தத்தாத்திரியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின்பு எழும்பூர் நீதிபதி 14 நாள் நீதிமன்ற காவலில் தத்தாத்திரியை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: ஆடம்பர திருமண ஆசை : மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.