சென்னை: தமிழ்நாடு முழுவதும் 19ஆம் தேதியுடன் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், சுகாதாரத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஒன்பதாவது முறையாகத் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றைத் திறப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், இனி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள்
- இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதி
- திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திறக்க அனுமதி
- திருமணம், இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு.
- கடைகள் செயல்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: ஜூலை 18இல் மோடியை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்