ETV Bharat / state

அதிமுக பொதுகுழுவிற்கு அனுமதி! - நீதிமன்றம் கூறியது என்ன? - சென்னை

சென்னையில் இன்று நடக்கும் அதிமுக பொதுகுழுற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுகுழுவிற்கு அனுமதி!
அதிமுக பொதுகுழுவிற்கு அனுமதி!
author img

By

Published : Jul 11, 2022, 10:14 AM IST

சென்னை: இன்று ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், 2190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஜூலை 11 கூட்டம் நடத்த ஒப்புதல் அளித்ததால் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து மற்றும் ஒற்றை தலைமை குறித்து முன்மொழிய தலைமை கழகத்திற்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.

கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலும் செல்லாது. அதனால் இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
2016ல் கட்சி நிர்வாகிகள் மூலமாக தான் வி.கே. சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யபட்டார்.

30 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ல் இறந்த பிறகு இடைக்கால பொது செயலாளராக சசிகலாவை நியமிக்க தலைமை கழக நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். பின்னர் 2016 ஜூலையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவிற்கும் தலைமை கழக நிர்வாகிகள் தான் அழைப்பு விடுத்தனர். அதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவை என்பது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டதாவது; 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். அது முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும்.

தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலியானதாக கருத முடியும். அதிமுக-வை பொறுத்தவரை 1987 மற்றும் 2016ல் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கட்சியில் ஓ பி எஸ்-க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பது தவறு. முதல்வராக இருந்த அவருடன் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். அதன்படி காலை 9 மணியளவில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதால் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்தலாம், விதிமீறல்கள் இருந்தால் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகலாம் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் அனுமதி உத்தரவை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், 250 செயற்குழு உறுப்பினர்களும் பொதுக்குழுவில் கலந்து கொண்டுள்ளனர்.

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது செயற்குழு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. செயற்குழுவில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்கள்: Video: பொதுக்குழுவிற்கு புறப்பட்ட ஈபிஎஸ் - வழியெங்கும் பூத்தூவி வரவேற்ற ஆதரவாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.