சென்னை: கரோனா பரவல் காரணமாக, விற்பனையாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மலேசிய மணலை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, வெளிநாடு மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சென்னை காமராஜர் துறைமுகம், அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் உள்ளிட்ட 3 துறைமுகங்கள் வாயிலாக 5 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மணல், 2 ஆண்டுகளாக இறங்குமதி செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பந்தம் நிறைவு பெற்றது. இந்நிலையில், கரோனாத் தொற்றின் காரணமாக மணல் விற்பனை முடங்கிக் கிடந்தது;
இதையடுத்து, தேங்கி உள்ள மணல் விற்பனையை உடனே தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேற்கொண்டு மணலை, இனி கொள்முதல் செய்ய வேண்டாம் என்று பொதுப்பணித்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: விசாகா குழு விசாரணைக்குத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க உத்தரவு