ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு! - Question about caste

பெரியார் பல்கலைக்கழக இரண்டாவது பருவநிலைத்தேர்வில் சாதியைக் குறித்து கேள்வி இடம்பெற்றதற்கு, உயர் கல்வித்துறை இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸை தலைவராகக்கொண்டு விசாரணை உயர் அலுவலர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை 3 பேர் கொண்ட குழு அமைப்பு- தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jul 19, 2022, 4:10 PM IST

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு ( எம்.ஏ.வரலாறு ) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலைத்தேர்வில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ’பெரியார் பல்கலைக்கழகம் முதுநிலை வரலாறு (எம்.ஏ.வரலாறு ) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலை தேர்வு வினாத்தாளில் சாதியைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உயர் கல்வித்துறை அரசு இணைச் செயலாளர் ம. இளங்கோ ஹென்றி தாஸ் என்பவரது தலைமையில் கீழ்க்கண்டவாறு விசாரணைக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

தலைவர் - ம.இளங்கோ ஹென்றி தாஸ் , அரசு இணைச் செயலாளர் உயர்கல்வித் துறை;
விசாரணை அலுவலர்கள் - ப.தனசேகர் அரசு துணைச் செயலாளர், உயர்கல்வித் துறை; B.S. விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் / திட்ட மேலாளர் (RUSA), ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கண்ட விசாரணைக் குழுவானது, பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு ((எம்.ஏ.வரலாறு) பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலைத்தேர்வில் சாதியைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, தனது அறிக்கையை இவ்வாணை வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், ’இக்குழு விசாரணை செய்வதற்குத் தேவையான அனைத்து அலுவலக வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என சார்ந்த பல்கலைக்கழக பதிவாளர் அறிவுறுத்தப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு; டிஜிபி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.