ETV Bharat / state

குடிநீர் வழங்கிய அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த திமுகவினர் ! - officers

சென்னை: தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கியதற்காக அலுவலர்களுக்கும், அரசுக்கும் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பாராட்டு தெரிவித்தனர்.

குடிநீர் வழங்கிய அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த திமுகவினர் !
author img

By

Published : Jun 12, 2019, 12:05 PM IST

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசும், சென்னை குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள தண்டையார் பேட்டை, மணலி, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட 15 பகுதிகளில் குடிநீர் வாரியம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைப்பெற்றது.

இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைப்பெற்ற முகாமில் மத்திய சென்னை திமுக 100 வார்டு வட்ட செயலாளர்கள் சுகுமாறன் தலைமையில் வந்த பொதுமக்கள் சிறப்பாக செயல்ப்பட்டு தட்டுபாடின்றி குடிநீர் வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததுடன், அரசுக்கும், அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

குடிநீர் வழங்கிய அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த திமுகவினர் !

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் ராமசாமி கூறும்போது, ”கடற்கரை பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆழ்துளை பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரட்டை ஏரியில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு கீழ்பாக்கம் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்தரிக்கப்பட்டு குடிநீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து சலுகைகளையும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளது” என்றார்.

தங்குதடையின்றி குடிநீர் வழங்கிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்த திமுகவினர் -  அண்ணாநகர் மண்டலத்தில் குடிநீர் வாரிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தங்கள் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை சிறப்பாக கையான்டதாக எதிர்கட்சிகள் பாராட்டு.

பருவ மழை பொய்த்து போனதால் சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க தமிழக அரசும், சென்னை குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக குறுகலான சாலை உள்ள பகுதிகளில் சிறிய குட்டியானை வண்டிகளிலும், பெரிய லாரிகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று பிடிக்காத வகையில் ஆறு டேப்புகளில் குடிநீர் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள அடிப்பம்புகளில் குடிநீர் வரும் வகையில் இஞ்சக்ட் முறையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குடிநீர் வாரியம் சார்பாக  மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைப்பெற்றது.

 சென்னையில் தண்டையார் பேட்டை ,மணலி, அண்ணாநகர் ,அம்பத்தூர் உள்ளீட்ட 15 பகுதிகளில் நடைப்பெற்றது. இதில் அண்ணாநகர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் பகுதி செயற்பொறியாளர் வைதேகி தலைமையில்  நடைப்பெற்ற குறைதீர்க்கும் முகாமில் எழும்பூர்,  அண்ணாநகர்,  வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்த 100 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மத்திய சென்னை கண்காணிப்பாளர் ராமசாமி, 

மேற்பார்வை பொறியாளர் தேவராஜன் துணை பகுதி பொறியாளர் நாகசெல்வி மற்றும்,  சுரேஷ்க்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 அப்பொழுது மத்திய சென்னை திமுக 100 வார்டு வட்ட செயலாளர்கள் சுகுமாறன் மற்றும் ஜெயசங்கர் தலைமையில் வந்த பொதுமக்கள் சிறப்பாக செயல்ப்பட்டு தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததுடன்,  சிறப்பாக செயல்பட்ட அரசுக்கும்,  அரசு அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். 

தொடர்ந்து திமுக தலைவரும், திமுகவினரும் பொதுமக்களை தூண்டி குடிநீர் தட்டுபாட்டை காரணம் காட்டி போராட்டங்களில் ஈடுப்பட்டு வரும் நிலையில் குடிநீரை தட்டுப்பாடு இன்றி வழங்கிய அதிகாரிகளுக்கும்,  அரசுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்தது அங்கிருந்த பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

சென்னை குடிநீர் வாரிய கண்கானிப்பாளர் ராமசாமி கூறும் பொழுது கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்க ஆழ்துளை பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் ஏற்கனவே இரண்டு ஆழ்துளை பம்புகள்  அமைக்கப்பட்டு அந்த குடிநீரை 

சோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும் இரட்டை ஏரியில் இருந் து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு கீழ்பாக்கம் சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்தரிக்கப்பட்டு குடிநீரானது விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தமிழக அரசு அனைத்து சலுகைகளும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.