கரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவும், தமிழ்நாடு அரசின் 144 தடை உத்தரவும் அமல்படுத்தபட்டுள்ளன. பால், மருந்து, மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், சமூக விலகல் அறிவுறுத்தல் என்ற ரீதியில் காவல் துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக உயர் நீதிமன்ற வரலாற்றிலே முதன்முறையாக இந்த வழக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாநில அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியார் காணொலி வழியே இணைந்திருக்க, வாத பிரதிவாதம் நடைபெற்றது.
எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை எனவும், இதுவரை ஊரடங்கை மீறியதாக 17, 118 வழக்குகள் பதியபட்டுள்ளதாகவும், முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும். நடுநிலையான அணுகுமுறையைக் கையாளவேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது” என்று கூறி காவல் துறைக்கு அறிவுறுத்தினர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வெளியில் வந்தால், காவல் துறை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.
'ஊரடங்கை மீறி வருபவர்கள் மீது காவல் துறை எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடாது' - madras high court
சென்னை: கரோனா பரவுவதைத் தவிர்க்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்கள் மீது காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.