இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்குப் பிரதமர் அறிவித்துள்ள ஏழு அம்ச சூத்திரங்களை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கரோனா நடவடிக்கைகளில் இந்தியாவை உலகமே பாராட்டுகிறது. அதைத்தொடர்ந்து அவர் தேசிய அளவில் ஊரடங்கை நீட்டித்துள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனைச் சாதிக்க முடியாது. இந்தியாவில் 130 கோடி மக்களைப் பாதுகாக்க வேண்டி உள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனைவரும் கண்டிப்பாகச் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா தடுப்பைப் பின்பற்றி தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எளிமையான வாழ்க்கை வாழ அப்துல்கலாமை பின்பற்ற வேண்டும்'- பன்வாரிலால் புரோகித்