ETV Bharat / state

மக்களைத் தேடி மருத்துவம் - மகராஷ்டிராவில் செயல்படுத்த திட்டம்

author img

By

Published : Sep 13, 2021, 8:10 PM IST

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மகராஷ்டிராவிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அனுகுஸ்ராவ் தோபே தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் செயல்படுத்த திட்டம்
மகராஷ்டிராவில் செயல்படுத்த திட்டம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு, கரோனா தொற்றை கட்டுப்படுத்திய விதம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக் கொள்ளவும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிந்து கொள்ளவும், மருந்துகள் கொள்முதல் செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை கண்டறிந்து தெரிந்து கொள்வதற்காக மஹாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அனுகுஸ்ராவ் தோபே தலைமையில், அம்மாநில சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், ”தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு தன்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதேபோல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுத் திட்டமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கரோனா தொற்று பாதிப்பு மகராஷ்டிராவில் முதல் அலை மற்றும் 2 வது அலையில் தினமும் 65 ஆயிரம் பேர் வரை இருந்தது. தற்பொழுது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.குறிப்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்தல்,பாதுகாத்தல் , பிரித்து அளித்தல் ஆகியவற்றில் முறையாக செயல்படுகிறது. இந்த திட்டத்தினை எங்களின் அதிகாரிகளும் பார்வையிட்டு செயல்படுத்த உள்ளோம்.

இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து நாங்களும் கற்றிருக்கிறோம். எங்கள் மாநிலத்திலும் கூடுதல் மருத்துவ கல்லூரிக்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தனித்துவம் மிக்க பல பணிகளை செய்து வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.