ETV Bharat / state

விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்..! - தேமுதிக

Vijayakanth Memorial: விஜயகாந்த் சமாதியில் கட்சி மற்றும் அமைப்பு பாகுபாடு இல்லாமல், பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

people-paid-tearful-tribute-at-vijayakanth-memorial-at-chennai
விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 10:11 PM IST

Updated : Jan 17, 2024, 4:07 PM IST

விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்..!

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த டிச.28ஆம் தேதி காலமானார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள், திரையுலகினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

பின்னர் கடந்த 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி மற்றும் அமைப்பு பாகுபாடு இல்லாமல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியைக் காணத் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக இன்று(ஜன.16) வந்திருந்தார்.

அப்போது ஏராளமான பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக விஜயகாந்த் சமாதியைக் காண வந்தனர். தேமுதிக தொண்டர்கள்,5 பேர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,“விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு எங்களால் நிம்மதியாக எதையும் செய்யமுடியவில்லை. தன் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்து இன்று அவர் மனித கடவுளாக இருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக, விருதம் இருந்து மொட்டை அடித்து இருக்கிறோம்” என்றானர்.

இது தொடர்ந்து திருச்சியிலிருந்து அஞ்சலி செலுத்த வந்த பெண் கூறுகையில் “ கேப்டன் இறந்த போது எங்களால் பார்க்க முடியவில்லை. சிறு வயதிலிருந்தே விஜயகாந்த் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய அப்பா இறப்பில் கூட நான் இவ்வளவு அழுதது கிடையாது.

நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது 10 கோடி கடனை அடைத்தவர் தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தால் மக்களுக்கு நிறைய நல்ல காரியங்களைச் செய்து இருப்பார் எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி பேசுகையில் ”விஜயகாந்த் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டு இருந்தார் என்பதைப் பார்க்காமல் சென்றது மக்களின் தவறு. 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சி தொடங்கிய போது எவ்வாறு எழுச்சியுடன் செயல்பட்டோமோ, அதோ போல் வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் செயல்படுவோம். தமிழகத்தின் முதன்மை கட்சியாக தேமுதிக வலம் வரும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து பெங்களூருவிலிருந்து அஞ்சலி செலுத்த வந்த நபர் பேசுகையில் “எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் மறைவு ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. அவரின் மறைவில் போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்ற கவலை இருந்தது. அதனைப் போக்கும் விதமாக இன்று அவரின் சமாதியைக் காண வருகை புரிந்துள்ளேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எங்கள் குடும்பத்தார்களுடன் நான் வேண்டிக் கொள்கிறோன்” என்றார்.

இதனையடுத்து அஞ்சலி செலுத்த வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேமுதிகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: 16 வருடங்களாக மாறாத தந்தையின் பாசம்.. 17 கி.மீ சைக்கிளில் சீர் சுமக்கும் உறவு!

Last Updated : Jan 17, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.