தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "110 விதியின் கீழ் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.
கரோனாவை ஒழிக்க சுகாதாரத்துறை மக்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் தற்போது சரிசெய்யப்பட்டிருக்கின்றன. கஜா புயலைத் தாங்கிக் கொண்ட மக்கள், தற்போது நிறைய வசதிகள் இருக்கும் சூழலில், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு, மருத்துவர்கள், சுகாதாரத்துறைக் கூறுவதை ஏற்று மக்கள் தனித்து இருக்க வேண்டும். மேலும், ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' - பிரதமரின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு