ETV Bharat / state

காணும் பொங்கல்; வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள்! - pongal holidays

Vandalur Zoo: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று காலை 1 மணி நேரத்தில் மட்டும் சுமார் 5,000 பேருக்கு மேல் வருகை புரிந்துள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 4:04 PM IST

சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் அமைந்துள்ளது, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.

ஆனால், வார இறுதி மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டதால், பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், நேற்று பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் பூங்கா வழக்கம் போல் செயல்பட்டது.

அதேபோல், அதிக பொதுமக்கள் வருகை புரிவதால், சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டது. பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, கட்டைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், 300 காவல்துறையினர், 130 வன ஊழியர்கள், 100 தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதல் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்பட்டுத்தப்பட்டிருக்கிறது.

பொங்கலை முன்னிட்டு, தொடர் விடுமுறையின் காரணமாக கடந்த 4 நாட்களாக பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில், இன்றும் பொதுமக்களின் வரத்து அதிகம் காணப்படுகிறது. மேலும், இன்று காலை 1 மணி நேரத்தில் மட்டும் சுமார் 5,000 பேருக்கு மேல் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் வட மாவட்டங்களில் பெய்த கன மழையால், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் தண்ணீர் சூழ்ந்து, சில சேதங்கள் ஏற்பட்டன. அதன்பின், அதனை சீரமைத்து மீண்டும் பூங்காவானது திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களின் வருகை அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஜல்லிக்கட்டில் ரியலாகவே நடிக்க ஆசை..! கிரிக்கெட்டை போல ஜல்லிக்கட்டையும் கொண்டாடுவோம்' - நடிகர் அருண் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.