இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வீடுகளைவிட்டு வெளியேறவே மக்கள் பயந்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா வைரசால் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றபோதிலும், மக்கள் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரிசி, பருப்பு, தண்ணீர் கேன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைத் தேவைக்கு அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பல்பொருள் அங்காடிகளும், கடைகளும் பொருள்கள் இன்றி காணப்படுகின்றன.
முன்னதாக மக்கள், தேவைக்கு அதிகமாக முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் வாங்கிக் குவித்ததால் அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், மக்களின் இந்த நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: 'முகக்கவசம், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை' - வேலூர் ஆட்சியர்