ETV Bharat / state

மாட்டு பொங்கல்: காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்.. இன்னைக்கு ஒரு புடி பிடிக்கணும்...

author img

By

Published : Jan 15, 2022, 8:28 AM IST

தொடர் விடுமுறையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்துள்ளனர். இன்று மாட்டு பொங்கல் என்பதாலும், நாளை முழு ஊரடங்கு என்பதாலும் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். நண்டு, இறால் வகைகள், வஞ்சிரம், சுறா, சங்கரா, கடம்பா உள்ளிட்டவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

மாட்டு பொங்கல்: காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்.. இன்னைக்கு ஒரு புடி பிடிக்கணும்..., காசிமேடு மீன் மார்க்கெட்
காசிமேடு மீன் மார்க்கெட்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா காரணமாக நாளை (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த பட உள்ளது.

இந்நிலையில், தொடர் விடுமுறையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்துள்ளனர். இன்று மாட்டு பொங்கல் என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

விற்பனைக்காகச் சின்ன நண்டு, இறால் வகைகள், சூரை, வஞ்சிரம், சுறா, களவாண், கோலா, சங்கரா, கடம்பா உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வந்திருந்தன. இதில் நண்டு கூடை ரூ.500 முதல் ரூ.700க்கும், இறால் கிலோ ரூ.300க்கும், டைகர் இறால் கிலோ ரூ.800க்கும், சூரை சிறிய வகை மீன்கள் கிலோ ரூ.140க்கும், பெரிய வகை சூறை மீன்கள் கிலோ ரூ.270க்கும் என்ற விலையில் விற்பனை நடைபெற்றது.

காசிமேடு மீன் மார்க்கெட்

மேலும், வஞ்சிரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600க்கும், சுறா சிறிய வகை மீன்கள் கிலோ ரூ.230க்கும், பெரிய வகை சுறா கிலோ ரூ.450க்கும், களவாண் வகை மீன் சிறிய வகை கிலோ ரூ.270க்கும், பெரிய வகை களவாண் மீன் ரூ.500க்கும், கோலா மீன் கிலோ ரூ.300க்கும், சங்கரா மீன் கிலோ ரூ.350க்கும், கடம்பா மீன் கிலோ ரூ.350க்கும், விரால் மீன் சிறிய வகை கிலோ ரூ.340க்கும், பெரிய வகை விரால் மீன் ரூ.650க்கும் விற்பனை ஆனது.

காசிமேடு மீன் மார்க்கெட்

கரோனா பரவலைத் தொடர்ந்து மீன் சந்தையில் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் காலை 6 மணிக்குப் பிறகு மீன்கள் இறக்கும் தளத்தில் வியாபாரிகளுக்கான விற்பனை நிறுத்தப்பட்டது.

சில்லறை விற்பனைக்கு மீன் வாங்கியவர்கள் மீன் மார்க்கெட்டின் பழைய மீன் விற்பனை கூடம் இருந்த இடத்தில் மீன்களை விற்றனர்.

மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் எனவும், கூட்டமாக யாரும் இருக்க வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு கொண்டே இருந்தது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி; தப்பிக்க வழி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.