தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மூலக்கடை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, புரசைவாக்கம், ஓட்டேரி, கே.கே. நகர், அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஆவடி நகர் முழுவதும் பலத்த காற்றுடன், லேசான இடி மின்னலுடன் அரை மணி நேரமாக மழை பெய்தது. புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளில் இடி மின்னலுடன், பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் 6 செ.மீ., மழையும், சென்னை தரமணியில் 5 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் திருவள்ளூர் மண்ணையும் மக்களையும் குளிர்வித்த மழை!