ETV Bharat / state

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - chennai news

சென்னை: ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன்.02) தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை

author img

By

Published : Jun 2, 2021, 3:43 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன்.02) தொடங்கி வைத்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பயன்களின் நிலுவைத் தொகையான 497.32 கோடி ரூபாயை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, ஆறு ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இ.ஆ.ப, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.