ETV Bharat / state

லண்டனில் பென்னிகுயிக் சிலை நல்ல நிலையில்தான் உள்ளது - அமைச்சர் சாமிநாதன்

லண்டனில் தமிழ்நாடு அரசால் வைக்கப்பட்ட பென்னி குயிக் சிலை நல்ல முறையில்தான் உள்ளது என அமைச்சர் சாமிநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Minister Sami nathan
அமைச்சர் சாமிநாதன்
author img

By

Published : Apr 17, 2023, 5:26 PM IST

சென்னை: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. ஆங்கிலேய பொறியாளரான கர்னல் பென்னி குயிக், இந்த அணையை 1895ம் ஆண்டு கட்டி முடித்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தன்று பொதுமக்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், பென்னி குயிக்குக்கு நன்றிக் கடனாக, அவரது சொந்த ஊரான லண்டனில் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் உருவச்சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்தச் சிலை கறுப்புத் துணியால் மூடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்குப் பதில் அளித்து பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, பென்னி குயிக்கின் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த ஊரிலேயே சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் செய்தித் துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து கற்சிலை நிறுவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிலைக்காக ரூ.10 லட்சத்து 65 ஆயிரமும், அதை நிறுவுவது வெளிநாடு என்பதால் கூடுதலாக ரூ. 23 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டது.

சிலையைத் திறப்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். சிலையினைத் திறப்பதற்கு முந்தைய நாள் இங்கிலாந்து ராணி மறைந்த காரணத்தினால், எளிய முறையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சிலையை அங்கே நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழுவும் ஒருங்கிணைக்கப்பட்டது.

திட்டமிட்ட செலவை விட கூடுதலாக செலவானதால் அது சம்பந்தமாக நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி, நிதி அனுப்ப நிச்சயமாக அரசு பரிசீலிக்கும். அதே நேரத்தில் சிலை கறுப்பு துணியால் கட்டப்பட்ட தகவல் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, அது அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது சிலை சிறந்த சூழலில் தான் உள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: கலாசேத்திரா பாலியல் வழக்கு: விசாரணை குழு நியமனம் குறித்து விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.