விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், “வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர் கண்டிப்பாக இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதுபோல, விமானமத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் செய்யப்படுவார்கள். அப்படி பரிசோதனை செய்யப்படும் போது அவர்களுக்கு கோவிட்-19 இருந்தால் அவர்களது பயணம் ரத்து செய்யப்படும். மேலும், விமான நிலையத்திற்கு வரும் அனைத்து தனி நபர்களும் அழியாத மை கொண்டு 'தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையுடன்' முத்திரை குத்தப்படுவார்கள்.
குறிப்பாக வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வருவோருக்கும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து வரும் நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக நடத்தப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!