ETV Bharat / state

'இலங்கைத் தமிழர் அகதி மாணவர்கள் நீட்டில் பங்கேற்க வழிவகைச் செய்ய வேண்டும்'

இலங்கைத் தமிழர் அகதி மாணவர்கள், நீட் தேர்வில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வழிவகைச் செய்ய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

pazha nedumaran request to stalin
pazha nedumaran request to stalin
author img

By

Published : Jul 19, 2021, 9:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பிறந்து வாழும் இலங்கைத் தமிழர் அகதி மாணவர்கள், நீட் தேர்வில் பங்கேற்க வழிவகைச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பலர் தமிழ்நாட்டிலேயே பிறந்தவர்கள் ஆவர்.

இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்துவருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பியபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.

உடனடியாக முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'நீட் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை உருவாக்குக'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.