ETV Bharat / state

சிறுநீரகம் கிடைத்தும் உயிருக்குப் போராடும் நோயாளி - அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : May 19, 2022, 10:47 PM IST

மாற்று சிறுநீரகம் கிடைத்தும் அதனைப் பொருத்துவதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கும் வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுநீரகம் கிடைத்தும் உயிருக்கு போராடும் நோயாளி - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் 27 வயதான சஞ்சய் சைமன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், “தனது சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் வாரத்திற்கு மூன்று நாட்கள் டயாலிசி்ஸ் செய்தால் மட்டுமே தன்னால் உயிர் வாழ முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஏற்கெனவே, கிரேஸி என்பவர் கடந்த ஆண்டு தனக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். அதற்கு உயர் நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. ஆனால், திடீரென கிரேஸியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனக்கு திட்டமிட்டபடி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.

தற்போது, தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் எனது ரத்த வகையைச் சேர்ந்திருக்கவில்லை என்பதால் அவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நான் வசிக்கும் குன்னூரில் விஜயலட்சுமி என்ற எங்களது குடும்ப நண்பர் ஒருவர் உள்ளார். அவர், எனது உடல்நிலை மோசமடைந்து நான் வலியால் அவதியடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவரது ஒரு சிறுநீரகத்தை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தானமாக அளிக்க சம்மதித்துள்ளார். ஆனால், விஜயலட்சுமி எனது ரத்த பந்த உறவினர் இல்லை என்பதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக்குழு இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இது எனது உயிரோடு தொடர்புடைய விசயம் என்பதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து விஜயலட்சுமியின் சிறுநீரக தானத்தை ஏற்றுக்கொண்டு எனக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு அவசர வழக்காக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக இன்று (மே19) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக்குழு கூட்டம் நாளை (மே 20) நடைபெறவுள்ளது. எனவே, அந்தக்கூட்டத்தில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கீகாரக்குழு தகுந்த முடிவு எடுத்து, அதை நீதிமன்றத்திலும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: சிறையிலிருந்து வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கு - முருகனை மீண்டும் 24ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.