ETV Bharat / state

சிறப்பு விமானங்கள் ரத்து: பயணிகள் கவலை - ஊரடங்கு உத்தரவு

சென்னை: சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல ஆவலுடன் வந்த பயணிகள், விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் கவலையடைந்தனர்.

passengers-worried-about-special-flights-canceled

author img

By

Published : Apr 15, 2020, 9:44 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் 24ஆம் தேதிமுதல் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், மீண்டும் தற்போது மே 3ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் முடங்கியுள்ள நிலையில், சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திலிருந்து, மலேசியாவிற்கு சிறப்பு விமானம் இயக்கப்படவிருப்பதாகப் பயணிகளுக்கு மலேசிய தூதரக அலுவலர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் இதில் பயணம்செய்ய 98 பயணிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு அனுமதி பெற்ற கார்களில் சென்னை வந்துள்ளனர்.

சிறப்பு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் கவலை

இந்நிலையில் பயணிகளை அழைத்துச்செல்ல மலேசியாவிலிருந்து எந்த விமானமும் வராததால், சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் சொந்த ஊருக்குச் செல்வோம் என்ற நம்பிக்கையிலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், விமான நிலையத்தில் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் கிடைக்கவில்லை என்றும், கழிவறைகளில் தண்ணீர் வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை என்றும் பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.