கொல்கத்தாவில் இருந்து 143 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. தரை இறங்குவதற்கு முன்பே விமானத்தில் பயணம் செய்த கொல்கத்தாவை சேர்ந்த ராம்தான் கோயல்(40) என்ற பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர், விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் உள்ள நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு விரைந்து சென்று ராம்தான் கோயலை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த விமான நிலைய காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 'தர்பார்' படத்தின் மீது அவதூறு வழக்கு