ETV Bharat / state

முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்... Passage of Bill to start new Siddha Medical University in Tamil Nadu with Chief Minister as chancellor  passage-of-bill-to-start-new-government-siddha-medical-university-in-tamil-nadu முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்
முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்... Passage of Bill to start new Siddha Medical University in Tamil Nadu with Chief Minister as chancellor passage-of-bill-to-start-new-government-siddha-medical-university-in-tamil-naduமுதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்
author img

By

Published : Apr 29, 2022, 8:23 AM IST

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.28) 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி, துணிநூல் துறை மற்றும் வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதனிடையே, சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார்.
அதில், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் மக்கள் தொகையின் 48.45 விழுக்காடு மக்கள் நகர்ப்புற பகுதிகளில் வசிப்பதாகவும், நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்றும், வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியினை கருத்தில் கொண்டு, வளர்ச்சி திட்டங்களைத் தயாரித்தல், மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செயற்படுத்துதலும் தேவையானதாகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்களுக்கு சட்டப்பூர்வமான தகுதி நிலையினை வழங்குதல் தேவையானதாக உள்ளதாகவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இந்நிலையில், 1971-ம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தினை ( தமிழ்நாடு சட்டம் 35/1972 ) திருத்துவதென அரசால் முடிவு செய்து அதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல்.28) மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும், முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதாவை நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. இதனையடுத்து, அதற்கான தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக சட்ட மசோதா நிறைவேறியது.

இதையும் படிங்க: சாலை விரிவாக்கப்பணி: நில எடுப்புப்பணிகள் முழுமையாக முடித்த பிறகு தான் டெண்டர் கோரப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

For All Latest Updates

TAGGED:

tn asembly
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.