ETV Bharat / state

பால்கனி விபத்தை பார்வையிட வந்த திமுக பெண் கவுன்சிலர் - வட்டச்செயலாளர் இடையே மோதல்! - வட்ட செயலாளர்

சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் பால்கனி விழுந்ததை பார்வையிட வந்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் திமுக வட்டச்செயலாளர் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

party-conflict-between-the-district-secretary-of-the-dmk-female-councilor
திமுக பெண் கவுன்சிலர் பிரேமா மற்றும் அவரது கணவர்
author img

By

Published : Jul 26, 2023, 6:51 PM IST

பால்கனி விபத்தை பார்வையிட வந்த திமுக பெண் கவுன்சிலர் - வட்டச்செயலாளர் இடையே மோதல்!

சென்னை: தியாகராய நகர் - ராமகாமத்துபுரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு, தற்போது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

பல கட்டடங்களில் மேல் தளங்கள் மிகவும் மோசமடைந்துள்ளன. சில வீடுகளின் கதவு, ஜன்னல்கள், சுவர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. பல அடுக்குமாடிகளில், பால்கனி அந்தரத்தில் தொங்குகிறது. இவை, எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முற்றிலும் சேதம் அடைந்துள்ள வீடுகளில் மழைநேரங்களில் வீட்டின் உள்ளே மழை நீர் வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

சுவர்கள் முழுவதும் விரிசல் விழுந்துள்ள நிலையில் ''o'' பிளாக்கில் நேற்று பால்கனி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அப்பொழுது அங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்த ஒரு மூதாட்டியும், ஒரு பெண்ணும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். தொங்கிய நிலையில் இருந்த பால்கனியை கடப்பாரை கொண்டு அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்த இடிபாடு தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 113வது திமுக வட்ட செயலாளர் விஷ்ணு, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து பார்வையிட்டு வந்த நிலையில், அங்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் பிரேமா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் பெண் கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி மேல் நடவடிக்கைக்குப் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

மழைக்காலத்திற்குள் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும்; உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் அதிகாரப்போட்டியில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டால் யாரிடம் முறையிடுவது என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பெரும்பாலும் இடியும் நிலையில் உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், புதியதாக கட்டித்தரப்படும் வீடுகளில் அனைத்து அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் எனவும், விரைவில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : 'போதும் டா சாமி'... போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.