கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாட்ஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாட்ஷாவுக்கு 2008 வரை 162 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2018 டிசம்பரில் பரோல் கேட்டு அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாட்ஷாவுக்கு பரோல் கோரிய விண்ணப்பத்தின் மீது 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.