ETV Bharat / state

ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் - ரூ.33 லட்சம் பணம், 213 சவரன் நகையை எடுத்து சென்ற மகன்!

ஆன்லைனில் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் வீட்டிலிருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகைகளை எடுத்து கொண்டு நேபாளம் செல்ல முயன்ற சென்னை பழைய வண்ணாரப்பேட்டைச் சேர்ந்தவரின் மகனை காவல்துறையினர் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பணம், நகை மீட்பு
பணம், நகை மீட்பு
author img

By

Published : Nov 19, 2021, 7:56 PM IST

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையைச் (Washermanpet) சேர்ந்தவரின் 15 வயது மகன் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் எந்நேரமும் ஆன்லைன் கேம் விளையாடி (Online game) வந்ததால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அவன், கடந்த 17 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சந்தேகமடைந்து வீட்டில் சோதனை செய்தபோது பீரோவில் வைத்திருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகைகளை அவன் எடுத்து சென்றது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து துணை ஆணையர் சிவபிரசாத்தின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பராங்வின் டேனி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து மாணவனை தேடி வந்தனர்.

பணம், நகை மீட்பு
பணம், நகை மீட்பு

இதையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் மாணவனின் செல்போன் சிக்னலை வைத்து தாம்பரம் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் மாணவனை மீட்டு பணம் மற்றும் நகையை கைப்பற்றி காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

மாணவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன்‌ கேம் விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும், நகையையும் எடுத்துச் சென்றதாகவும், நகையை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைக்க முயற்சித்து பணத்திற்காக காத்திருந்ததாகவும், பின்னர் 44 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று நேபாளம் செல்வதற்காக இன்று காலை விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் நகையை பெற்றோரிடம் ஒப்படைத்து, மாணவனை அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க: 580 ஆண்டுகளுக்குப் பின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.