சென்னை: புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், சத்யா. கூலித்தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகனான 16 வயது சிறுவன், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளி செல்லும் வேளையில் அங்குள்ள திருநங்கைகள், 16 வயது சிறுவனுடன் நட்பாகப் பேசி வந்துள்ளதாகவும், சிறுவனுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த சிறுவனுக்கு இதில் உடன்பாடில்லை என தெரிகிறது. இதற்கிடையே, கடந்த வாரம் திருநங்கையான ஷாலு என்பவர், சிறுவனை கட்டாயப்படுத்தி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சேர்ந்து, அச்சிறுவனை வலுகட்டயாமாக திருநங்கை வேடமணிந்து, பிச்சை எடுக்க வைப்பது, சட்டவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனை ஏற்க மறுத்த அச்சிறுவனை அடித்துத் துன்புறுத்தியுள்ளதாகவும், இதனால் சிறுவனுக்கு முகத்தில் காயம் அடைந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து சிறுவனின் பெற்றோர் ஒட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவிலை என்றும், இதனால் விரக்தி அடைந்த அவர்கள், திருநங்கைகளிடம் நேரடியாகச் சென்று சிறுவனை அழைத்து வர முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்போது சிறுவனை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் 5 லட்சம் பணம் தர வேண்டும், இல்லை என்றால் கொன்று விடுவோம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் சத்தியா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து, சிறுவனை திருநங்கைகளிடமிருந்து மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தனது மகனை வலுக்கட்டாயமாக திருநங்கையாக மாற்றி, கொலை மிரட்டல் விடுத்த திருநங்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் சத்தியா புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் நடந்த மோதலில் ஒருவர் கொலை.. கோவையில் நடந்தது என்ன?